சீன நாட்டில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உகானில், கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதலாக பரவிய கொரோனா வைரஸ் உலகம் நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கமானது அசுர வேகத்தில் பரவிக்கொண்டு வருகிறது.
தற்போதுவரை சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் ஏற்படும் தொடர் உயிரிழப்புகளும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கொரோனா பரவ வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ளது.
சீன நாட்டினை மையமாக கொண்டு பரவிவந்த நிலையில், உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், இதுவரை 3000க்கும் அதிகமான பேர் வைரஸ் பாதிப்பின் காரணமாக பலியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தந்து. மேலும், 80,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் யுவான் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம் என எண்ணிய பெண் ஒருவர் பீதியில் 3000 யுவான் நோட்டுகளை வீட்டில் உள்ள மைக்ரோ ஓவன் உள்ளே வைத்துள்ளார். இதில் தீயின் சூட்டில் பணம் முழுவதும் கருகிப் போயுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Hot Money! A woman in Wuxi, E #China's Jiangsu Province, heated 3,000 yuan cash in a microwave oven over fears the banknotes might be infected with #coronavirus. CITIC Bank's local branch exchanged the burned notes for new ones after verification. #COVID19 pic.twitter.com/7wgKvjMFqx
— Global Times (@globaltimesnews) March 3, 2020