பிரபல ஆண்கள் பாடசாலையின் 20 மாணவர்கள் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியிலுள்ள இரு மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயன்ற காரணத்தால் குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
அத்துடன் கைதான மாணவர்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.