யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று இரவு நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.