பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 39 ஆக இருந்த நிலையில் டெவனில் (Devon) உள்ள பாடசாலையில் ஒரு மாணவனுக்கு , கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது.
குறித்த மாணவன் வடக்கு இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவிகையில்; கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரஸ் தொற்றுக்களைக் கையாள எமது சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. அத்துடன் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம் எங்களிடம் உள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கவும் மருத்துவ காரணங்களுக்காகவும் சுய-தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
மேலும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.