எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசுவதற்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்ட நிலையில், தற்போது பேரம் பேசுவதற்கு 20 ஆசனங்களை வழங்குமாறு மக்களிடம் கோருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.