தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்க முடியும் என நம்புவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவது தொடர்பாக தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். தோட்ட நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.
தோட்டத் தொழிலாளர்களின் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். அப்போது நாள் சம்பளமாக தலா ஆயிரம் ரூபாயை வழங்க முடியும் எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.