மேற்கத்தைய ஆதிக்கம் முடிவுக்கு வருவதை இந்த சகாப்தத்தில் பார்க்கமுடிவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துபாயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். சீனாவில் ஏற்பட்ட பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் எழுச்சிகளே இதற்கான காரணமாகும்.
இதேவேளை அமெரிக்கா அரசியல் ரீதியாக எப்போதும் இல்லாதவகையில் பிரிந்துப்போயுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிந்துப்போய் வலுவிழந்துள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டார்.
சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று இலங்கை உட்பட்ட சர்வதேச நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.