பாடசாலை மாணவர்களுக்கான அரசியல்வாதிகளின் செய்திகள், புகைப்படங்களை நீக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வியமைச்சர் எடுத்து இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அது அமைய வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.