இந்தியாவில் தாய் ஒருவர் தனது 4 வயது மற்றும் 4 மாத குழந்தையையும் விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன் மற்றும் சுகன்யா(27). திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் குறித்த தம்பதிக்கு பவ்யா(4), கிரண்யா(4 மாதம்) என இரண்டு பெண்குழந்தைகள் இருந்துள்ளனர்.
அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் இந்த தம்பதிகள் சம்பவத்தன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுகன்யா இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனால் சுகன்யாவில் குழந்தை, உயிரற்று கிடந்த தாயைப் பார்த்து அம்மா… வா.. ம்மா.. என்று கதறி கதறி அழுதுள்ளது. குழந்தையின் அழுகையை சமாதானப்படுத்த முடியாத கிராமத்து மக்களும் கண்கலங்கி அழுதுள்ளனர்.
இதனிடையே மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுகன்யாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதையடுத்து, பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.