டிக் டாக்கில் பெண்களை மயக்கி பணம் பறித்து வந்த காதல் மன்னன் கண்ணன் என்ற இளைஞரை நெல்லை பொலிசார் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த டிக்டாக் கண்ணன் ஏறகனவே பொலிசாரை மிரட்டி வீடியோவை பதிவிட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று வந்தவர் என அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது.
நெல்லை காவல்துறையினருக்கு ஆபாச பேச்சை பேசி, சவால் விட்டதால் 17 வயதிலேயே சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
டிக்டாக்கில் பல பெண்கள் கண்ணனிடம் பணத்துடன் பலவற்றையும் பறிகொடுத்த நிலையில், தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் பெண்ணின் உறவினர்கள் கதறியதால், டிக்டாக்கில் ஆட்டம் போட்ட கண்ணனை சேர்ந்தமரம் பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் 8 ஆம் வகுப்பை கூட தாண்டாத கண்ணன், கட்டிடவேலைக்கு சென்றாலும் டிப்டாப் ஆடையுடன் கல்லூரி மாணவன் என நடித்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.
டிக்டாக்கில் மயங்கிய பெண்களை வாட்ஸ் அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆடைகளை களைய சொல்லி வீடியோவாக பதிந்து வைத்து, அதனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மெயிலில் அனுப்பி மிரட்டி பணம் பறித்த இவனுக்கு பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவந்து மெயிலை பரிசோதனை செய்ததில், ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இதனால் தங்கள் குடும்ப மானம் போய்விடும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரிடம் கதறி அழுதுள்ளனர்.
அதனால், அவர்களின் பெயர் முகவரியை மறைத்த தோடு அந்த வீடியோக்களையும் அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, குற்றவாளி கண்ணன் மீது வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய வெள்ளத்துரை என்பவரை தாக்கி கத்திமுனையில் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கண்ணன் மற்றும் அவனது சகோதரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டதால் இருவரையும் வழிப்பறி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது டிக்டாக் காதல் மன்னன் கண்ணன் மீது காவல்துறையினர் பதிவு செய்யும் 6 வது வழக்காம். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு முதல் சேர்ந்தமரம், திருநெல்வேலிடவுன், ஊத்துமலை, உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி,என 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவனை குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.