சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம டிடி தான். எந்த ஒரு தொகுப்பாளினிக்கும் இல்லாத ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.
இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழகும் விதமே அவ்வளவு கலகலப்பாக அழகாக இருக்கும் என்பதால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக இருப்பார்கள்.
தற்போது டிடி விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும், Dancing Superstars நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் டிடி அளித்த ஒரு பேட்டியில் தனது முந்தைய திருமண வாழ்கையை பற்றி கூறியுள்ளார். அதில்,
” வாழ்க்கையில் காதல் இரண்டு பேரிடமும் இருக்க வேண்டும், சூழ்நிலை காரணமாக அது உடையவும் செய்யும்.
அந்த நேரத்தில் ஒரு சிலர் நம்மை ஆதரிப்பார்கள், சிலர் கீழே தள்ளிடுவாங்க, நாம் தான் அதையெல்லாம் தள்ளி வச்சுட்டு அடுத்து என்ன என்பதை பார்க்க வேண்டும்.
விவாகரத்து ஆன நாள் என் மனதில், எப்படியாவது கோர்ட்டுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டே இருந்தது.
அதன் பிறகு இப்போது வரை பேசவில்லை, சந்திக்க கூட இல்லை, ஆனாலும், வாழ்க்கை கடந்து சென்றுக்கொண்டே தான் உள்ளது, கிடைச்ச வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி ” என கூறியுள்ளார்.