எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் , யானை சின்னத்திலேயே தாம் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் ஐ.தே.க கூறியுள்ளது.
அந்தவகையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்ஆணையகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பன கடிதம் இன்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.