பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கைக்கு வந்த கேட்ச்சை காம்ரான் அக்மல் கோட்டை விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் போன்று, பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த பாகிஸ்தான் சூப்பர் லீகில் தொடரில் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்குவது, வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் நடைபெற்று வரும் நடப்பு தொடரில் காம்ரான் அக்மலின் செயல்பாடு ரசிகர்களை சந்தேகத்திற்கு ஆளாக்கியுள்ளது. பெஷாவர் ஸால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அக்மல் ஒரு கேட்ச்சை விட்டார்.
அது வேண்டுமென்றே விடப்பட்டதாக ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி 15 ஓவரில் 170 ஓட்டங்கள் எடுத்தது.
KAMRAN AKMAL PUTS DOWN ANOTHER ONE ❌
Sohail Khan managed to hit it high up into the night sky but Kamran Akmal couldn't take it #HBLPSLV #TayyarHain #CricketForAll pic.twitter.com/Hj4HdvhfxU
— Cricingif (@_cricingif) March 5, 2020
அதன் பின், 171 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 140 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
171 ஓட்டங்கள் என்ற இலக்கை கிளாடியேட்டர்ஸ் அணி விரட்டும்போது, ஹசன் அலி வீசிய 14-வது ஓவரின் மூன்றாவது பந்தை அடித்த தூக்கியடித்தார் சொஹைல் கான்.
ஆனால் ஷாட்டின் டைமிங் சரியில்லாததால் எட்ஜ் ஆகி அதிகமான உயரத்திற்கு சென்றது. அதை மிகச்சரியாக விரட்டிச்சென்ற காம்ரான் அக்மல், பிடித்திருக்க வேண்டிய கேட்ச்சை கோட்டைவிட்டார்.
அவர் விட்ட விதத்தை பார்த்தால் வேண்டுமென்றே விட்டது பேலே இருந்தது. இதனால் அவர் வேண்டுமென்றே கேட்சை விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.