ஈரானில் ஒரே நாளில் 1,234 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாகவும், 16 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மொத்தம் 100,710 பேர் இலக்காகியுள்ளனர். இதில் 6,286 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஆனால், தற்போது பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஈரானில் ஒரே நாளில் மொத்தம் 1,234 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் மொத்தம் 4,747 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 124 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் ஈரானிய மக்கள் கடும் பீதியில் உள்ளனர். மட்டுமின்றி, முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.