வரட்சியின் காரணமாக 8 மாவட்டங்களில் 298,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 74,796 குடும்பங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரேலியா, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, இரத்தினபுரி. கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோரே வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 51,175 குடும்பங்களைச் சேர்ந்த 215,525 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.