முன்னைய ஆட்சியின்போது அமெரிக்க தூதரகம் இலங்கையின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக முன்னாள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியின் தூதரகம் அந்த நாட்டின் தீவிரவாத அமைப்பான (எப்)பெட்டோ அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கைக்கு வந்துள்ளமை குறித்து இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுக்கு அறிவித்திருந்தது.
எனினும் இந்த அமைப்பின் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை அமெரிக்க தூதரகம் விரும்பவில்லை. அந்த அமைப்பை அமெரிக்கா தீவிரவாத அமைப்பாக கருதவில்லை என்றும் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டார்
பெட்டோ அமைப்புடன் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் வர்த்தக தொடர்பை கொண்டிருந்தனர் என்ற தகவல் தொடர்பில் கருத்துரைத்தை அவர் முன்னாள் அமைச்சர், ரிசாத் பதியுதீன் அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்பது பின்னர் தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்
இந்தநிலையில் பெட்டோ அமைப்பு தொடர்பாக துருக்கியின் தூதரகம் அனுப்பிய எச்சரிக்கை கடிதம் தொடர்பில் தாம் ஜனாதிபதியின் செயலருக்கும் பாதுகாப்பு பிரதியமைச்சராக இருந்த ருவன் விஜயவர்த்தனவுக்கும் கடிதம் மூலம் அறிவித்ததாக முன்னாள் பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டார்.
இதன்போது தேசிய பாதுகாப்பு கருதி விடயம் தொடர்பில் பாதுகாப்பு சபையில் பேசவுள்ளதாக ஜனாதிபதி செயலர் தமக்கு அறிவித்தாக வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டார்.