சுவிஸ்சில் உள்ள மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு ஹொரோனோ வைரஸ் பயத்தில் யாழ்ப்பாணம் வந்த பிரபல ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் சூரிச் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர். கடந்த வாரம் மனைவிக்கு காய்ச்சல் தொடங்கியுள்ளது.
அது தடிமன், காய்ச்சல் என சுவிஸ் வைத்தியசாலை உறுதிப்படுத்தியிருந்தும் அந்த காய்ச்சல் தனது 12 வயதான மூத்த மகளுக்கும் வந்தவுடன் அது ஹொரோனோ வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என கருதிய குறித்த குடும்பஸ்தர் தனக்கும் பிடித்துவிடும் என கருதி யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.
தனது நெருங்கிய சிநேகிதன் விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறி யாழில் இந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியைக் காட்டியே அவசர அவசரமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார் குறித்த குடும்பஸ்தர். இருப்பினும் தனது புருசனின் கள்ளத்தனத்தை அறிந்த மனைவி செத்த வீடு தொடர்பாக பத்திரிகையில் வெளியாகியிருந்த மரண அறிவித்தலில் இருந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து செத்த வீடு நடந்து இரு நாட்களின் பின்னர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு எடுத்த போது கணவனின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பாகிய மனைவி கணவனை உடனடியாக சுவிஸ் வருமாறு அழைத்த போது அவர் அதற்கு மறுத்து மனைவி மற்றும் பிள்ளைகளையும் யாழ்ப்பாணம் வருமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு ஹொரோனோ வைரஸ் பரவாது என கூறி அவர்களை வரவழைக்க முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதே வேளை மனைவி இது தொடர்பாக கணவனின் சகோதரர்களுக்கு தெரியப்படுத்தியும் அவர்களும் தனது சகோதரனை அங்கு அனுப்ப முடியாது என கூறியதாக மனைவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹொரோனோவால் விவாகரத்து ஏற்படும் சூழ்நிலை தோன்றியுள்ளதாக மனைவி தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.