யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நகை பறிப்பு மற்றும் தொலைபேசி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கிளிநொச்சி இளைஞன் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் நகை திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த பொக்கற் ராஜா எனப்படும் நபர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய குறித்த இளைஞன் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் தொலைபேசி திருட்டு மற்றும் வீதிகளில் நகை பறிப்பு போன்ற சம்பவங்களுடன்தொடர்புபட்டு நீண்ட காலமாக யாழ்ப்பாண பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் யாழ்பொம்மை வெளிப்பகுதியில் வைத்து யாழ்ப்பாணகுற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து களவாடப்பட்ட 5 தொலைபேசிகள் மற்றும் தங்கச்சங்கிலி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த காண விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
நீண்டகாலமாக யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் பயணிக்கும் பெண்களின் தாலி கொடிகள் மற்றும் சங்கிலிகள் இனந்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரொகான் முனசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் கரிச சமரக்கோன், உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்து இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.