நடனம், நடிப்பு, இயக்கம் என பிரபுதேவா தற்போது செம்ம Busy ! ஆனாலும் அவருக்கு தன் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை தவறவில்லை. பிரபு தேவா அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளின் தந்தையாக இருந்த பிரபு தேவா ஒரு ஆண் குழந்தை உயிர் இழந்ததிலிருந்து அந்த அதிர்ச்சியில் இருந்து சில நாட்கள் மீளாமல் இருந்தார்.
தற்போது அவரது உலகமே அவருடைய 2 குழந்தைகள் தான், மேலும் இரண்டு குழந்தைகளும் நன்றாக வளர்ந்துவிட்டார்கள்.
நடிகர் பிரபு தேவா முதலில் தமிழில் பல படங்களில் நடன கலைஞராக இருந்தவர், இன்றும் அவர் Choreograph செய்த Rowdy Baby World Wide Hit . Dance Master ஆக இருந்த இவர் பின்னர் ரோஜாவுக்கு ஜோடியாக இந்து என்கிற படத்தில் மூலமாக முதன் முதலில் ஹுரோவாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த காதலன் படம் அவரை உலகம் முழுவது கொண்டு போய் சேர்த்தது.
அதனை தொடர்ந்து பல படங்களில் ஹுரோவாக நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் எடுத்த போக்கிரி படம் மட்டும் தான் ஹிட்.
திரையுலகை பொறுத்தவரை இங்கே நமது பிள்ளைகள் மீது மேல் நட்சத்திர வெளிச்சம் பட்டு விடுமோ என்று பிரபலங்கள் பலர் தங்களது பிள்ளைகளை வெளியே காட்டிக்கொள்வது இல்லை. அதில் நம்ம பிரபுதேவாவும் விதி விளக்கில்லை.
அந்த வரிசையில் நடன புயல் பிரபுதேவாவை அறிந்த உலகம் அவரின் குழந்தைகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அண்மையில் குழந்தைகளோடு நடன புயல் பிரபுதேவா எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.