அமெரிக்காவில் மகளின் தோழியும் தனது மகள் தான் என விளையாட்டாக தந்தை அடிக்கடி கூறி வந்த நிலையில் உண்மையில் யாரும் எதிரபார்க்காத வகையில் இருவரும் தந்தை – மகள் என DNA பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Philadelphia நகரை சேர்ந்தவர் , Ashley Thomas (31). இவரும் Toya Wimberly (29) என்ற இளம்பெண்ணும் 17 வருடங்களாக நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.
இரண்டு இளம்பெண்களும் பள்ளி பருவத்தில் இருந்து தோழிகள் ஆனார்கள்.
ஆனால் Ashley மற்றும் Toya ஆகிய இருவரின் உருவத்தில் ஒருவித ஒற்றுமை இருந்த நிலையில் அதை இருவரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
15 வருடங்களுக்கு முன்னர் Ashley வை தந்தை ஸ்தானத்தில் வளர்ந்த நபர் உண்மையில் அவர் தந்தை என்பதை தெரிந்து கொண்டார்.
இதன்பின்னர் சில ஆண்டுகளில் Ashley-வின் தாயார் உயிரிழந்தார்.
இந்த சூழலில் Ashley தாயின் தோழிகள் Toya மற்றும் அவர் தந்தை , Kenneth ஆகிய இருவரின் புகைப்படங்களை பார்த்தனர். அப்போது , Kenneth மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த சூழலில் Ashley அடிக்கடி உயிர் தோழி Toya வீட்டுக்கு வந்த போது அவரின் தந்தை Kenneth-யிடமும் பழகியுள்ளார்.
அந்த சமயத்தில் எல்லாம் Kenneth, Ashley -விடம் நீயும் என் மகள் தான் என சிரித்தப்படி ஜாலியாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் Ashley தாயின் தோழிகளின் சந்தேகத்தின் படி Ashley மற்றும் Toya-வுக்கு DNA பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவு அவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர கொடுத்தது.
அதாவது Ashley மற்றும் Toya ஆகிய இருவரும் சகோதரிகள் என்றும் இருவருக்குமே Kenneth தான் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து Kenneth கூறுகையில், இந்த விடயம் என் மனதை ரணமாக்கியது, அதே சமயம் இவ்வளவு திறமையான, அழகான Ashley என் மகள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியளிக்கிறது.
எனக்கு இன்னொரு மகள் இருக்கிறாள் என வாழ்க்கையில் மிகவும் தாமதமாக தெரிந்துள்ளது. இது கடவுளின் செயல் என கூறியுள்ளார்.