கொடிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போராட்டத்தின் நடுவில், வெளிப்படையான மோதல் சுவிட்சர்லாந்திற்கும் ஜேர்மனிக்கும் இடையே வெடித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு பாதுகாப்பு முகமூடிகளை வழங்குவது தொடர்பான விவகாரத்திலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.
மட்டுமின்றி, பாதுகாப்பு முகமூடிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ கருவிகளுக்கான ஏற்றுமதியை ஜேர்மனி தடுத்து நிறுத்தியுள்ளது.
இதனையடுத்து சுவிட்சர்லாந்துக்கான ஜேர்மன் தூதுவரை அழைத்து இந்த விவகாரம் தொடர்பில் தங்கள் கண்டனத்தை விவிஸ் நிர்வாகம் பதிவு செய்துள்ளது.
மட்டுமின்றி தடுத்து நிறுத்தப்பட்ட ஏற்றுமதியை சூழல் கருதி உடனடியாக அனுமதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவலின்படி, சுவிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு லொறி ஜேர்மன் சுங்க அதிகாரிகளால் சுவிட்சர்லாந்திற்கு ஓட்டிச்செல்வதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த லொறியில் சுமார் 240,000 மருத்துவ முகமூடிகள் உள்ளன. ஆனால் இது முதன்முறை அல்ல எனவும், இதேப்போன்று பலமுறை லொறிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த புதனன்று அத்தியாவசிய மருத்துவ பயன்பாட்டிற்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஜேர்மனி தடை செய்துள்ளது.
ஜேர்மனையை அடுத்து பிரான்சும் ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், இதனால் கடுமையா பாதிப்புக்கு சுவிட்சர்லாந்தும் இத்தாலியும் தள்ளப்பட்டது.
மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற மருத்துவ பயன்பாட்டிற்கான அத்தியாவசிய பொருட்கள் ஏதும் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
ஜேர்மனியும் பிரான்சும் இந்த விவகாரத்தில் கடும்போக்கு தொடர்வதால், சுவிஸில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடும் சிக்கலில் உள்ளனர்.