பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்கு பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நான்காவது நபர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
வால்வர்ஹாம்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது நோயாளி, பிரித்தானியாவில் இருந்த போது தான் நோய்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது அந்த நபருடன் தொடர்பு கொண்டவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்து வருவதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவகத்தின் கிறிஸ் விட்டி கூறியுள்ளார்.
அதேசமயம் திங்களன்று காலை 9 மணி வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 319 ஐ எட்டியிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.