கல்வியை மேம்படுத்தும் நன் நோக்கத்தில் உண்டாக்கப்பட்ட மட்டக்களப்பு கெம்பஸானது அந் நிறுவனத்தின் எதுவித ஒப்புதலையும் பெறாது அரசு ஆக்கிரமித்திருப்பது கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (09)வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
இந் நிறுவனம் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்லாண்டு கால முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எடுக்கப்பட்ட தொடர் முயட்சியின் பலனாக வெளிநாட்டு நிதி அனுசரணையை பெற்று நிறுவப்பட்ட பாரிய நிறுவனமாகும்.
இன ரீதியிலான பல அழுத்தங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நிறுவப்பட்ட இந் நிறுவனமானது தனது கல்வி நடவடிக்கைகளை இதுவரை ஆரம்பித்திருக்காத நிலையில் தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் இவ்வாரான ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் அந் நிறுவனத்திற்கும்,
அந் நிறுவனத்தை அமைப்பதற்காக நிதி அனுசரணைகளை வழங்கிய அனுசரணையாளர்களுக்கும் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதோடு எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களுக்கு நிதி அனுசரணை பெறுவதையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது.
கிழக்கு மாகாணம் கல்வித் தரத்திலே கீழ் நிலையில் இருக்கும் இத் தருனத்தில் இவ்வாறான அரசாங்சத்தின் செயட்பாடுகளை கிழக்கு வாழ் சிறுபான்மை சமூகத்தை சிக்கலுக்குள்ளாக்கும் இனரீதியான செயட்பாடாகவே எம்மால் பார்க்க வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு கெம்பஸை கொரோனா, மற்றும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரை கொண்டு வந்து தனிமைப்படுத்தும் இடமாகத் தேர்வு செய்த செயடற்பாடுகளுக்கு அங்கே வாழும் மக்கள் உட்பட கிழக்கு வாழ் மக்கள் அனைவருமே தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
எனவே இது குறித்து ஆராய்ந்து இம் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என்று அரசாங்கத்தையும் இவ்வரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற சிறு பான்மை மக்கள் பிரதி நிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.