ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி ஹரீஸ்(Harrish) இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்தக்கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை, கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளது.