கொரோனா நோயால் கனடாவில் முதல் பலி பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு வான்கூவரில் உள்ள ஒரு மூத்த பராமரிப்பு இல்லத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Lynn Valley பராமரிப்பு மையத்தில் நடந்த மரணம், கனடாவில் நடந்த முதல் COVID-19 மரணம் என்று நம்பப்படுகிறது.
மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி மற்றும் சுகாதார அமைச்சர் அட்ரியன் டிக்ஸ் ஆகியோர் Lynn Valley பராமரிப்பு மையத்தில் வசிக்கும் இரண்டு வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக சனிக்கிழமையன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.