கொரோனா குறித்த வீண் வதந்திகளை நம்பி யாரும் பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று ( திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா குறித்த வீண் வதந்திகளை நம்பி யாரும் பீதியடைய வேண்டாம். கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் அரசு சார்பில் இன்று மாலை வெளியிடப்படும். பாடசாலைகள், அங்கன்வாடிகள், தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கூடுதலாக முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 1,22,318 பேரை பரிசோதித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.