இத்தாலியில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ள நிலையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் குடும்ப அவசர நிலைமையை தவிர்த்து வேறு எந்தவொரு சுற்றுலா பயணம் மேற்கொள்ளக் கூடாது என இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளது.
இத்தாலியில் 9172 பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கபப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மிலானோ நகரில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பதற்கு முன்னர் இத்தாலியில் இருந்து 15 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
மட்டக்களப்பு – பெட்டிக்கலோ கெம்பஸில் அமைந்துள்ள மையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலியில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறிச் செயற்பட்டால் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவை காரணமாக வெளியில் செல்வோர், மற்றவருக்கு இடையில் ஒரு மீற்றர் தூரத்தில் நின்று பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.