உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1700 அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை இந்த அளவிற்கு அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இதுவென குறிப்பிடப்படுகின்றது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகளாவிய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் எண்ணெய் வர்த்தகத்தை கைவிட்டு தங்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளனர்.
மேலும் அமெரிக்க முறி வட்டி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் முதலீட்டாளர்கள் தங்கம் கொள்வனவு செய்வதே பாதுகாப்பான முதலீடாக கருதுவதாக வெளிநாட்டு வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.