முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு படைகளின் தளபதிகள் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
சபாநாயகரால் அமைக்கப்பட்ட இந்தக்குழு சாட்சியங்களை பதிவுசெய்து தொகுத்துள்ளது.
இதன்படி புலனாய்வு தரப்பினரின் தகவல்களை கருத்திற்கொள்ளாது செயற்பட்டமை காரணமாகவே இந்த அனர்த்தங்கள் நிகழ்ந்ததாக குமாரஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.