திருகோணமலை, மொரவேவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இருவரும் மொரவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி- யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.