ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு சொந்த கட்சிக்குள் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டது.
எனினும் இன்று அரசாங்கத்தரப்பினரால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் விலங்குகளை போன்று தாக்கப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
பொத்துஹர என்ற இடத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தயாசிறி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் ஆதரவுடன் கோட்டாபய 6.9 மில்லியன் வாக்குகளை பெற்றமையை சிலர் மறந்துவிட்டனர் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை கை சின்னத்தில் போட்டியிடுமாறு கோரப்பட்டது.
வேறு சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டனர், எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபயவுக்கு ஆதரவாக செயற்பட்டது.
எனினும் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் நாய்களுக்கு சமமாக நடத்தப்படுகின்றனர் மறுபுறத்தில் அரசாங்க தலைவர்கள் பொது எதிரியான ஐக்கிய தேசியக்கட்சியை குறிவைக்காது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்று தயாசிறி சுட்டிக்காட்டினார்.