திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனியாக இருந்த காதலியை கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன்.
கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் தினேசுக்கு மது, கஞ்சா, பெண்களுடன் தொடர்பு என தகாத பழக்கங்கள் இருந்துள்ளது.
இதுபற்றி தெரியவந்ததும் தினேசை சந்தித்து பேசிய நந்தினி, நீ முன்ன மாதிரி இல்லை, நிறைய தப்பு பண்ற.
எப்படி உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிறது, எங்க அம்மாகிட்ட கெஞ்சி எப்படியெல்லாம் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினேன் தெரியுமா.
ஆனா இப்ப பயமா இருக்கு, உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது என கூறிவிட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ், அடிக்கடி நந்தினியை சந்தித்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
நந்தினி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தினேஷ் அன்றைய தினம் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளான்.
நந்தினியின் வீட்டுக்கு சென்று,திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வற்புறுத்தியுள்ளனான்.
ஆனால் நந்தினி, உன்னை கல்யாணம் பண்ணிக்க சாவதே மேல் என கூற, அப்படியென்றால் சாவு என கட்டையை கொண்டு தலையில் பலமாக அடித்துள்ளான்.
அத்துடன் கையில் கொண்டு வந்திருந்த சாணிப்பவுடரை கலக்கி வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளனான்.
சிறிது நேரத்தில் நந்தினியின் அம்மா வர மகளின் நிலையை பார்த்து கதறித்துடித்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார்.
இதற்கிடையே தினேசும் வாயில் சாணிப்பவுடரை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.