லண்டனிலிருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்ற ஒரு தம்பதியினர், தங்களுக்கு தெரியாமலே, தாங்கள் சென்று வந்த இடங்களிலெல்லாம் கொரோனாவை பரப்பி வந்துள்ளார்கள்.
Graham Craddock (68) மற்றும் அவரது மனைவி Mary (69), வியட்நாமுக்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்கள். அப்போது, தாங்கள் கொரோனா தொற்றிய ஒரு பெண்ணுடன் பயணிக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
வியட்நாமில் இறங்கிய இருவரும், நாடு முழுவதும் பல சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்த்திருக்கிறார்கள்.
பிறகுதான் அவர்களை தொடர்பு அதிகாரிகள், அவர்கள் பயணம் செய்த விமானத்திலிருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்த விடயம் தெரியவந்தது குறித்து தெரிவித்திருக்கிறார்கள்.
பிறகு சரியான கழிவறை வசதி கூட இல்லாத Lao Cai என்ற மருத்துவமனையில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், தம்பதியருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளன.
Lao Cai மருத்துவமனையில் வேறு நோயாளிகள் இல்லாததால் தம்பதியர் நிம்மதியாக இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளார்கள்.
அந்த நேரத்தில் வெளியுறவு அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் அவர்களை தொலைபேசியில் அழைத்துள்ளார்கள்.
Grahamம் Maryயும் எங்கெல்லாம் சுற்றினார்களோ, அங்கெல்லாம் அவர்கள் இருவரும் கொரோனாவை பரப்பி வந்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், அது அவர்களது தவறு இல்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்த அதிகாரி ஒருவர், அவர்கள் இருவரையும் Lao Cai மருத்துவமனையிலிருந்து அவசரமாக வெளியேற்றக் காரணம், மேலும் 54 பேருக்கு கொரோனா இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரையும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிவந்ததால்தான் என்பதையும் தெரிவித்துள்ளார்.
தம்பதியருடன் விமானத்தில் பயணித்த கொரோனா தொற்றிய பெண், உள்ளூரில் செல்வாக்கு படைத்த ஒரு பெண் என்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா உட்பட, 8 ஐரோப்பிய நாடுகளிலிருந்து விசா இல்லாமல் பயணிக்கும் நடைமுறையை வியட்நாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.