ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய மத்திய செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியின் சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளது.
இதன்போது தமது கட்சிக்கு வழங்கப்படப்போகும் வேட்பாளர்கள் தொடர்பில் பேசப்படவுள்ளது.
அத்துடன் பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஓரங்கட்டும் வகையில் செயற்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.