கொரோனா வைரஸ் தொடர்பான எந்த சோதனையையும் தாம் மேற்கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் தம்மிடம் தென்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உள்ள மருத்துவர் தன்னை பரிசோதனை செய்துள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், தாம் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியிலும் கொரானோ வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.