இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், மூன்றே மூன்று உறுப்பினர்கள் மட்டும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
அதற்கான அனுமதியை மட்டுமே, மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார். அதன்பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ், நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான், மருதபாண்டி ரமேஷ்வரன் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு, செந்தில் தொண்டமானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் நால்வர் போட்டியிடுவர் என கதைகள் அடிப்பட்டன. எனினும், சட்டத்தரணி ராஜதுரைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சட்டத்தரணி ராஜதுரைக்கா அல்லது சக்தி வேலுக்கா வழங்குவது என்பது தொடர்பில் இ.தொ.காவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக இறுதி செய்யப்பட்டவில்லை என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.