வுகான் மருத்துவமனைகளில் தனது சகாக்கள் பலர் உயிரிழப்பதை பார்த்ததாக தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப எச்சரிக்கைகளை சீன அதிகாரிகள் மறைத்தனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சீன சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் வுகான் மத்திய மருத்துவமனையின் இயக்குநர் அய்பென் இதனை தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் சார்ஸ் போன்ற வைரஸ் குறித்து மேலதிகாரிகளிற்கு தெரிவித்தமைக்காக எச்சரிக்கப்பட்டேன் எனவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் 3000 பேரை வைரஸ் பலிகொண்டுள்ள நிலையில் தனது மருத்துவமனையை சேர்ந்த நான்கு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கும் என்பது முன்பே தெரிந்திருந்தால் நான் மேலதிகாரிகளின் எச்சரிக்கையை அலட்சியம் செய்திருப்பேன் எங்கெல்லாம் அது குறித்து பேச முடியுமோ அங்கெல்லாம் பேசியிருப்பென் யாரிடம் எல்லாம் அது குறி;த்து பேச முடியுமோ அவர்களிடம் எல்லாம் நான் பேசியிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 30 திகதி பலர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதையும்,வழமையான சிகிச்சைகள் அவர்களிற்கு பலனளிக்காததையும் பார்த்த பின்னர் எனக்கு ஆய்வு கூட பரிசோதனை முடிவொன்று வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அதில் சார்ஸ்கொரோனவைரஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது என தெரிவித்துள்ள அவர் எனக்கு வியர்க்க தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.
நான் அந்த வார்த்தையை வட்டமிட்ட பின்னர் எனது பாடசாலை சகாவான மருத்துவரிற்கு அனுப்பினேன்,அன்று மாலைக்குள் அது வுகானில் சமூக ஊடகங்களில் பரவியது எனவும் அய்பென் தெரிவித்துள்ளார்.
அன்றிரவு மருத்துவமனையிலிருந்து மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக வைரஸ் குறித்த செய்தியை கண்மூடித்தனமாக வெளியிடவேண்டாம்; என்ற அறிவுறுத்தல் எனக்கு கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையின் ஒழுக்க நடவடிக்கை குழுவினால் நான் அழைக்கப்பட்டு பொய்யான தகவல்களை வெளியிட்டமைக்காக கண்டிக்கப்பட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையின் பணியாளர்கள் தகல்கள் படங்களை பரிமாறிக்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னால் மருத்துவமனையின் பணியாளர்களை முகக்கவசங்களை அணிந்துகொள்ளுமாறு மாத்திரம் கேட்க முடிந்தது அதற்கும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நோய் தொற்று அதிகரித்ததும் பெருமளவு மக்கள் மருத்துவமனைக்கு வருவதை பார்த்தோம்,கடலுணவு சந்தையுடன் தொடர்பில்லாதவர்களும் வரத்தொடங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சீன அதிகாரிகள் அவ்வேளை மனிதர்களிடமிருந்து மனிதர்களிற்கு வைரஸ் பரவில்லை என தெரிவித்த வண்ணமிருந்தனர் ஆனால் அது உண்மையில்லை என்பது எனக்கு தெரிந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அய்பென்னின் பேட்டி செவ்வாய்கிழமைக்கு பின்னர் சீனாவின் சமூக ஊடகங்களில் இருந்து காணாமல்போயுள்ளது.
குறிப்பிட்ட சஞ்சிகையும் அந்த கட்டுரையை நீக்கியுள்ளது.