இராணுவத்தினால் தற்போது மேற்கொள்ளப்படுவது மனிதாபிமான நடவடிக்கை என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (11) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியியொன்றில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சீனாவில் இருந்து வருகை தந்த மாணவர்கள், தற்போது இலங்கைக்கு வந்தவர்களை விட மாறுபட்ட விதத்தில் செயற்பட்டதாக தெரிவித்தார். சீனாவில் இருந்தவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மேற்கொண்ட சிரமங்கள் தொடர்பில் அவர்கள் சிறிய அளவில் அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டில் இருக்க முடியாமல் நீண்ட பயணம் மூலம் இலங்கை வந்தவர்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் சில அசௌகரியங்கள் காரணமாக அவர்களுக்கு வேறு விதமான உணர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும், அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டாலும் அவர்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போத்தல் ஒன்றை வெட்டி அதில் தேனீர் தருவதாக நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கை இராணுவம் போத்தல்களை வெட்டி தேனீர் வழங்கும் இராணுவம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முகாம்களுக்கு 2000 கட்டில்கள் வழங்க ஏற்பட்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் தங்களது கட்டில்களை வழங்கிவிட்டு தரையில் தூங்கும் இராணுவத்தினருக்கு இவ்வாறு கூறுவது நல்ல விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.