ஹரியானாவில் இருக்கும் ஜெண்டை பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியை சரியாக கணக்குப்போடாத காரணத்தால் ஆசிரியர் தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் ஷாதிப்பூர் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் நடந்தேறி இருக்கின்றது. அந்த ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்த மூன்றாம் வகுப்பு மாணவியின் தாய், “தன்னுடைய எட்டு வயது மகளை அரசு பள்ளியில் பணிபுரியும் அசோக்குமார் என்ற கணித வாத்தியார் சரியாக கணக்குப் போடாத காரணத்தால் அடித்து இருக்கின்றார். இதன் காரணமாக எனது மகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றது.
மேலும், மிகவும் சிறுமியான இந்த குழந்தையின் மனதிலும், உடம்பிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். இந்த காயத்தின் காரணமாக 8 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக உணவு சாப்பிடாமல் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.



















