தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது வீட்டில் பிகில் படம் ரூ 300 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்ததால் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அப்போது ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த நிலையில், மீண்டும் இன்று வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நடிகர் விஜய் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மை தான். ஆனால் சோதனையில் ஈடுபடவில்லையாம்.
இதற்கு முன்னதாக நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதற்காகவே வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.



















