இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கவிருந்தது.
மழை காரணமாக நாணய சுழற்சி தள்ளிவைக்கப்பட்டது. எனினும், மழை தொடர்ந்ததால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி கைவிடப்பட்டது.
சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மீண்டும் எழுச்சிப்பெறும் என ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு மழை பெருத்த ஏமாற்றம் அளித்தது.
இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி லக்னோவில் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.