இலங்கையில் அதிக பயணிகள் ஒன்றுகூடும் இடமாக கருதப்படும் கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 07 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் கொரோனா அச்சம் காரணமாக குறைவடைந்திருப்பதைக் அவதானிக்க முடிந்ததாக கூறப்படுகின்றது.
இலங்கையில் தினமும் 02 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா அச்சம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கமானது ரயில் திணைக்களத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.