மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் ஒன்றாக பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
எனினும் , இந்த ஆபத்தான வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏன் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தனிமைப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் மக்கள் செறிவற்ற பிரதேசங்களை அடையாளம் கண்டு அரசாங்கம் இவ்வாறான கண்காணிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் அபிப்பிராயத்திற்கு அமையவே எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.