கொரோனா வைரஸ் தற்போது இலங்கையில் உள்ள இருவருக்கு தொற்றியுள்ள நிலையில் மேலும் பரவாமல் இருக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டத்தை விளக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கோரோனாவில் இருந்து பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என அனைவரையும் பாதுகாக்கும் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த வைரஸ் பரவுவதை தடுக்க தனியார் துறையுடன் பேசி சிறந்த திட்டமொன்றை அமுல்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.