கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து எந்தவொரு பயணிகளையும் இலங்கைக்கு அழைத்து வருவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இதனை செயற்படுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.