கொரோனா தொற்று ஆரம்பமாகிய சீனாவில் இருந்து வரும் சீனப் பிரஜைகள் எவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வரும் பயணிகள் மாத்திரமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வேலை செய்யும் வீரரின் அரசாங்கம் எந்தளவுக்கு சீனாவுக்கு சார்பாக இருக்கின்றது என்பதை அறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தப்படாத நிலையில 240 சீனப் பிரஜைகள் நாட்டுக்குள் வந்துள்ளனர் எனவும், இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11ஆம் திகதி வரை சீனாவில் இருந்து 2741 சீனப் பிரஜைகள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவர்கள் எவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவில்லை. அத்துடன் சீனப் பிரஜைகள் நாட்டுக்குள் வரும்போது விமான நிலையத்தில் வழங்கும் தகவல்கள் பெரும்பாலும் போலியானவை எனக் கூறபடுகிறது.
அவர்கள் வழங்கும் இலங்கை மற்றும் சீனாவின் முகவரிகள் போலியானவை என தெரிவிக்கப்படுகிறது.