இலங்கைக்கு நன்கொடையாக கொரோனா தொற்றினை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை வழங்க சீனா முன்வந்துள்ளது.
இலங்கையில் கொரோனா பரவி வரும் நிலையில், இந்த உதவியை வழங்க சீனா முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை எட்டவுள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகில் 127 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், தற்பொழுது நோய்தொற்று நீங்கி படிப்படியாக உயிரிழப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட சுமார் 27 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 1,552 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் மூவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஒருவர் குணமடைந்துள்துடன் , இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.