யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாள்களில் 2 ஆயிரத்து 500 ரூபாயால் தங்கம் விலை குறைவடைந்துள்ளது.
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கம் நிலவி வரும் நிலையில் இன்று கணிசமாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இன்று (மார்ச் 13) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 71 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்றையதின ம் 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் இன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 78 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்ற நேற்று 80 ஆயிரத்து 200 ரூபாயாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.