எம்மை நாம் மறந்து இந்த உலகத்தின் பின் நின்று பயந்துகொண்டிருக்கின்றோம். உலகை உலுக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்து அது எங்களை வந்தடையும் வரை பொறுத்திருப்பதற்கு நாங்கள் சனத்தொகையால் அதிகமானவர்கள் அல்ல… வல்லரசுகளும் அபிவிருத்தி அடைந்த நாடுகளும் திணறும்போது நாங்கள் எந்த மட்டுக்கு…
இருப்பினும் எமது மூதாதையர்கள் எமக்கென்று சில வரைமுறைகள், பழக்கவழக்கங்களை வகுத்துள்ளார்கள்… அது பிரதேசத்துக்கு பிரதேசம் சற்று வேறுபட்டதாக இருக்கலாம். காலநிலைகள் இட அமைவுகளை பொறுத்து வகுக்கப்பட்டிருக்கலாம்.
காரணம் கேட்கும் போது “அதெல்லாம் அப்படி தான்” என்று எமது பெற்றோர்களை பதில் கூறுவதால் நாங்கள் அந்த பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறைவு.
நாங்கள் தவிர்க்க வேண்டியதையும் பின்பற்றவேண்டியதையும் ஆராய்வது அவசியமாகின்றது…
மேலைத்தேய நாகரீகத்தில் முகம் கொண்ட நாம் வணக்கம் சொல்லும் முறையை குறைத்துவிட்டோம்.. கைகொடுப்பதும் கட்டிபிடித்து நலம்விசாரிப்பதாகவும் எமது வாழ்க்கை நகர்கின்றது. ஊரில் நாங்கள் பெற்றோர் சகோதரங்களை கூட கட்டிபிடிப்பது குறைவு பெரும்பாலும் தோளில் தட்டியே நலம் விசாரிப்போம்…
ஆனால் இப்போது???
மற்றவர்களிடம் இருந்து எம்மை பாதுகாக்கவும் எம்மிடம் இருந்து மற்றவர்களை பாதுகாக்கவும் தொடுகை முறைகளை தவிர்ப்போம்.
வைத்தியசாலைக்கு சென்றால் குளித்துவிட்டு வீட்டுக்குள் போகும் பழக்கம் எங்களுடையது முடிந்தவரை இம்முறையை பின்பற்றுவோம்.
குழந்தை பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கு போனால் கால் கை கழுவி விட்டு அவர்களுடைய வீட்டுக்குள் செல்வது எமது வழமை… சில வீட்டு வாசல்களில் வாளியில் தண்ணீர் வைத்திருப்பார்கள்… யாரும் ஏதும் நினைப்பார்கள் என்று ஒதுக்காமல் இம்முறையை வழக்கப்படுத்துவோம்.
மேலைத்தேய முறைகளில் வீட்டு செல்லபிராணிகளுடன் கொஞ்சி குலவாமல் அவற்றை தவிர்ப்போம்.
வெள்ளி செவ்வாய் கிழமைகளில் வீட்டை சுத்தமாக்கி மஞ்சள் தண்ணீர் தெளிப்பது வழமை. மஞ்சள் ஒரு தொற்றுநீக்கி… சீமேந்து நிலம் என்றால் மஞ்சள் சேர்த்து வீட்டை கழுவுதல் சிறந்தது.
வீட்டு வாசல்களில் வேப்பிலை கட்டுவது வழமை… முடிந்தால் வீட்டின் முழு வாயில்களிலும் வேப்பிலை கட்டலாம்… வேப்பிலை சிறந்த தொற்றுநீக்கி…
வீட்டு வாசலில் உப்பை சிறு பாத்திரத்தில் வைப்பது வழமை… அது அசுத்த விடயங்களை அகற்றுவதற்காக என்று காரணம் கூறுவார்கள்… பச்சையாக உண்ணும் உணவுகளை உப்புதண்ணீரால் கழுவி உண்பது கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.
பாலுடன் மஞ்சள் கலந்து குடிப்பது… உப்பு சுடுநீரில் கலந்து கால் கை வாய் சுத்தம் செய்வது….
வேப்பம் பட்டை அவித்து குடிப்பது… மரமஞ்சல் அவித்து குடிப்பது கிருமிகளை கொல்ல வல்லது..
கற்பூரவல்லி சாப்பிடுவது அல்லது சாற்றை எடுத்து குடிப்பது.. உணவுகளில் கறிவேப்பிலை அதிகமாக பாவிப்பது… சிறந்தது.
வீடுகளில் துளசி செடிவளர்ப்பது காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
பசு சாணம் மற்றும் கோமயம் சிறந்த தொற்றுநீக்கி
கண்ணூறு என்று வீட்டு வாசல்களில் மிளகாய் வேப்பிலை எரிப்பது காரணம் இல்லாமல் இருக்காது.
வீட்டுக்கு சாப்பிராணி தூபம் காட்டுவது…
எம்மையும் எமது சுற்றுபுறத்தையும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகளை எம்முன்னோர்கள் எமக்காக விட்டுசென்றுள்ளனர். அந்நிய கலாச்சார மோகத்தால் நாம் அவற்றை தொலைத்துகொண்டு இருக்கின்றோம்…
இதைவிட உங்களுக்கு தெரிந்த தொற்று நீக்கும் முறைகளையும் பதிவிட்டுங்கள்.
கிருமி தொற்றுகளில் இருந்து எம்மையும் எமது சூழலையும் பாதுகாப்போம்.