இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜ்வாலால் மாவட்டத்தில் இருக்கும் சான் கிராமத்தில் ஜலீம் சிங் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் இதே கிராமத்தை சார்ந்த திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இவர்களின் முறையற்ற பழக்கம் மற்றும் உல்லாச வாழ்க்கை பெண்ணின் உறவினர்களான சிங், சம்ரட்சசிங், நாராயண் மற்றும் ராம்லால் ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜலீம் சிங்கை தீர்த்துக்கட்ட அனைவரும் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி சம்பவத்தன்று தனியாக வந்து கொண்டு இருந்த ஜலீமை இடைமறித்து அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் ஆத்திரம் தீராது ஜலீமின் ஆணுறுப்பை அறுத்து எரிந்து சரமாரியாக வெட்டிச்சாய்த்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் ஜலீமின் உடலை அங்குள்ள வாய்க்கால் ஓரமாக வீசிவிட்டு சென்ற நிலையில், பொதுமக்கள் மறுநாள் காலையில் காவல் துறையினருக்கு சடலம் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சிங், சம்ரட்சசிங், நாராயண் மற்றும் ராம்லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.